×

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து சரிகிறது

மேட்டூர்: கர்நாடக அணைகளில் இருந்து உபரிநீர் திறப்பு வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து சரிந்துள்ளது. நேற்று முன்தினம் காலை விநாடிக்கு 9 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று  காலை விநாடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக சரிந்தது. எனினும் அருவிகளில் குளிக்கவும், பரிசல் சவாரி செய்வதற்கும் தடை நீடிக்கிறதுஅதேநேரம் மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 7,812 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை விநாடிக்கு 9,997 கனஅடியாக அதிகரித்தது.  டெல்டா பாசனத்திற்கு 8 ஆயிரம் கனஅடியும், கால்வாய் பாசனத்திற்கு 600 கனஅடியும் திறந்து  விடப்படுகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 119.94 அடியாக இருந்த நிலையில், நேற்று காலை 119.95 அடியாக சற்று உயர்ந்தது. நீர் இருப்பு 93.39 டிஎம்சி. மேட்டூரில் நேற்று காலை நிலவரப்படி 5.60 மி.மீ. மழை பதிவானது.

Tags : Oakenacal ,Hogenakkal , Hogenakkal, Inflow, Plunges
× RELATED ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரிப்பு